தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அணை விவகாரம்: அமமுக கண்டன ஆர்ப்பாட்டம் - ammk announced protest against Mekedatu project

மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்து அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

ammk
டிடிவி தினகரன்

By

Published : Jul 25, 2021, 5:13 PM IST

சென்னை:மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்தும், ஒன்றிய, மாநில அரசுகள் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்கிறார். இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதி நீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலக்கட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது.

தீயசக்தி திமுகவின் ஆட்சி

அதிலும் தீய சக்தியான திமுக எப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் புதிய அணைகள் கட்டுவதை கர்நாடகா வழக்கமாக வைத்துள்ளது. கர்நாடகா, இப்போதும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது.

இதனைக் கண்டித்தும், அணையைத் தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் , காவிரி பிரச்னையில் உறுதியாக நின்று சட்டப்படியான தீர்ப்புகளை நமக்குப் பெற்று தந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அமமுக சார்பில் வரும் வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்தே தீருவோம்' - துரைமுருகன் பதிலடி

ABOUT THE AUTHOR

...view details