தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மன் சன்னதி 5 டன் காய், கனியால் அலங்கரிப்பு - chennai latest news

புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில் வளாகம் 5 டன் காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டு நிறைமணி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

அம்மன் சன்னதி 5 டன் காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொலி
அம்மன் சன்னதி 5 டன் காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொலிஅம்மன் சன்னதி 5 டன் காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொலி

By

Published : Sep 21, 2021, 6:21 AM IST

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில் நிறை மணி காட்சி நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு கோயில் கருவறை முன் பகுதிகளில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஐந்து டன் உணவுப் பொருள்கள் பந்தல் முழுவதும் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன.

அம்மன் சன்னதி 5 டன் காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது தொடர்பான காணொலி

மொத்தம் மூன்று நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சியின் கடைசி நாளில், இங்கு தொங்கவிடப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒன்றுசேர்த்து சமைத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.

இந்நிலையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

இதையும் படிங்க:கோவை இளைஞர்களின் முயற்சியால் உருவான 'மகிழ் வனம்'

ABOUT THE AUTHOR

...view details