சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது திமுக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் அம்மா உணவகத்தை சூறையாடியுள்ளனர். உணகவகத்திலுள்ள காய்கறிகள், பாத்திரங்களை சேதப்படுத்தி, அங்கிருந்த பெயர் பலகைகளை உடைத்தனர்.
அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுக: ஜெயக்குமார் கண்டனம்! - admk
சென்னை: மதுரவாயல் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுகவினரைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்வீட் செய்துள்ளார்.
அம்மா உணவகத்தை சூறையாடிய திமுக
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளைங்களில் வைரலாகிவருகிறது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டர் பக்கத்தில், 'ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மழை, வெள்ளம், கரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்` எனக் குறிப்பிட்டுள்ளார்.