தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் - ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10 ஆம் முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Amma unavagam
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் - ஸ்டாலின் அறிவிப்பு

By

Published : May 8, 2021, 1:14 PM IST

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்றும், நாளையும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்கும். ஊரடங்கு நாள்களில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் , நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 வரை உணவு வாங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் உணவு டெலிவரி செய்ய மேற்குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்களுக்கு அனுமதி இல்லை.

சென்னை,பிற மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழு ஊரடங்கு: இயங்குவதும், இயங்காததும்?

ABOUT THE AUTHOR

...view details