தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் திருத்தம்' - பயனாளிகளின் வயது வரம்பில் மாற்றம்! - amma twowhell scheme new rules announced

சென்னை: அம்மா இருசக்கர வாகனத் திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பயனாளிகளின் வயது வரம்பை உயர்த்தி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Amma two wheller scheme
இருசக்கர வாகன திட்டம் திருத்தம்

By

Published : Dec 6, 2019, 12:03 AM IST

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகளைக் கேட்டு, அரசுக்கு கருத்துரு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டியில், சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசு திருத்தம் செய்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில்,

  • பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுடைய நபராக இருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, 45 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று மாற்றப்படுகிறது.
  • பயனாளி கண்டிப்பாக 8ஆம் வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்ற பிரிவு ரத்து.
  • அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், சமையல்காரர் மற்றும் உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் பெண்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ், வரும் பெண்களின் (திட்ட பயனாளிகள்) ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.
  • இதே நிலைக்கு உள்படும், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்களும் திட்டப் பயனாளிகளாக முடியும் என்ற பிரிவு சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஜெயலலிதா சமாதிக்கு நடந்துகூட செல்லாத தினகரன்' - விளாசி தள்ளிய புகழேந்தி!

ABOUT THE AUTHOR

...view details