சென்னை அடுத்த ஆவடியில் குடிசைமாற்று வாரிய பகுதியில் எட்டு கோடி மதிப்பில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்தை, முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டனர்.
எட்டு கோடி மதிப்பிலான அம்மா திருமண மண்டபம் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். ரஜினி கூறிய கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அப்போதும் இப்போதும் ஒரே விதமாக பேசியுள்ளார். இதிலிருந்து மக்கள் தெரிந்துகொள்வார்கள் யாருக்கு அரசியல் புரிதல் இல்லையென்று. ரஜினி, தமிழ்நாடு மாணவர்களுக்கு அன்பு தந்தையாக சகோதரனாக இருந்து அறிவுரை கூறியுள்ளார்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக குறிப்பிட்ட மக்களை நாடுகடத்திவிடுவார்கள், முகாம்களில் அடைத்துவிடுவார்கள் என தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை கோபப்படுத்தும் விதமாக பீதியை உண்டாக்குகிறார். மேலும் வதந்திகளை செய்தியாக்கி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இருவரும் மக்களை பிளவுபடுத்துகின்றனர். ஒரு கோடி கையெழுத்து பெற நடத்தும் இந்த இயக்கத்தை தடை செய்யவேண்டும். இந்த செயலை மத்திய அரசு ஏன் பார்த்துக்கொண்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவின் இரட்டை தலைமைக்கு எதிரான வழக்கு - ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!