கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதகிருஷ்ணனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பரப்புரைக் கூட்டத்தில் பேசியதாவது, "எதிரி நாட்டு விமானத்தை தாக்கிய அபிநந்தன் மண்ணில் இருந்து பேசுவதற்கு பெருமை கொள்கிறேன். கொங்கு மண்ணில் பேசுவது பெருமையாக உள்ளது.
அபிநந்தன் மண்ணில் நின்று பேசுவது பெருமையாகவுள்ளது-அமித்ஷா - அமித்ஷா
கோவை: எதிரி நாட்டு விமானத்தை தாக்கிய அபிநந்தன் மண்ணில் இருந்து பேசுவதற்கு பெருமை கொள்கிறேன் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கடந்தமுறை அதிமுகவுடன் கூட்டணி இல்லை, அப்படி இருந்தும் கன்னியாகுமரியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று வந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இருவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. பொள்ளாச்சியில் தென்னை ஆராய்ச்சி நிலையம், கோவை முதல் சேலம் வரையிலான விமான சேவை, கோவையில் ஆடை உற்பத்திக்காக 1.30 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். ஆனால் திமுக-காங்கிரஸ் ஆட்சியில் ஒரு திட்டங்கள் கூட செய்யவில்லை. மீண்டும் கோவை தொகுதிக்கு சிறப்பான திட்டங்கள் செய்ய பாஜக வெற்றிப்பெற வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.