தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெற தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசுடன் சுமுகமான போக்கை அதிமுக கடைபிடித்து வருகிறது. ஆனால் அதேசமயம் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மாநில தலைவர் எல். முருகன் கூட்டணிக் கட்சியினருடன் அதிகளவில் நெருக்கம் காட்டாமலே இருக்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம்: தமிழ்நாட்டுக்கு வருகிறார் அமித் ஷா! - BJP state president L.K. Murugan
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த மாதம் சென்னை வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
Amitshaa
இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை உறுதி செய்து தேர்தல் வியூகங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வரவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இது குறித்து எல். முருகன் கூறுகையில், "அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் இந்த மாதம் தமிழ்நாட்டிற்கு வருவதாகக் கூறியுள்ளார்" என்றார்.