தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Producer Ravindar: கிளப் ஹவுஸ் மூலம் ரூ.15 லட்சம் மோசடி; தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பரபரப்பு புகார்! - சீரியல் நடிகை மகாலட்சுமி

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சமூக வலைதள செயலின் மூலம், அமெரிக்க வாழ் இந்தியரிடம் பழகி கடனாக பெற்ற ரூ.15 லட்சத்தை திருப்பித் தரவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Producer Ravinder Chandrasekar
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர்

By

Published : Jun 28, 2023, 7:17 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்ன தெரியுமா, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்சன் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கிளப் ஹவுஸ் என்ற சமூக வலைதள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், விஜய் சென்னையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதள செயலியில் பழகியதை வைத்து தயாரிப்பாளர் ரவீந்தருக்கு கடந்த ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி, நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தரவண்டும் எனக்கூறி 20 லட்ச ரூபாய் பணம் தயாரிப்பாளர் ரவீந்தர் கேட்டதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக விஜய் கூறியதாகவும், இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் பணத்தை ரவீந்தர் நிறுவனமான லிப்ரா புரொடெக்‌ஷன் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின் விஜயிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர் சந்திரசேகர், பின்னர் 15 லட்சம் பணத்தை கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி திருப்பிக் கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால், ரவீந்தர் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை என அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது ரவீந்தரிடம் பணம் கேட்டதற்கு, தொடர்ந்து அலை கழித்ததாகவும், ஒரு கட்டத்தில் தனது மனைவியும் ரவீந்தர் தொடர்பு கொள்ள முற்பட்ட போது அமெரிக்க நபர் விஜயின் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார்" எனக் கூறியுள்ளார்.

கொடுத்த பணத்தை கேட்கும் போது அவதூறு செய்யும் வகையில் பேசியதால், ஆத்திரம் அடைந்த விஜய் ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ போன்றவற்றை வைத்து சென்னை காவல் ஆணையருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தற்போது இந்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர்கள் ரவீந்தரிடம் கேட்கும் போது, "பணம் தர ஒப்புக்கொண்டு செக் அனுப்புவதாக தெரிவித்ததன் பேரில் புகார்தாரர் விஜய் சமாதானமாக செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய் புகாரை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும்" தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தரப்பில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது?... தேதியை அறிவித்த படக்குழு..!

ABOUT THE AUTHOR

...view details