தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ பெயரை பயன்படுத்த மற்ற உணவகங்களுக்குத் தடை!

சென்னை: ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ கடையின் பெயரை பயன்படுத்த திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி உணவத்திற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ambur

By

Published : Nov 11, 2019, 9:32 PM IST

பாரம்பரியம் மிக்க நவாப் குடும்பத்திற்கும், அவர்களின் இல்ல திருமண விழாக்களிலும் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றியவர் ஹசைன் ஃபேக், இவர் 1890ஆம் ஆண்டு ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ என்ற பெயரில் உணவகத்தை தொடங்கி நடத்திவந்துள்ளார்.

நாளடைவில், தரம் மற்றும் சுவையின் காரணமாக பிரபலமடைந்த ’ஆம்பூர் பிரியாணி’ சென்னை, பெங்களூரூ, திருப்பதி மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதன் கிளைகளுடன் இயங்கிவருகிறது. ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ உணவகங்களை ஹசைன் ஃபேக்கின் கொள்ளுபேரன் அனீஸ் அகமது தற்போது நடத்திவருகிறார்.

இந்நிலையில், தங்களிடம் அனுமதி பெறாமல் ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ என்ற பெயரில், ஆம்பூரை எடுத்துவிட்டு திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது என்றும், இது தங்களுடைய உணவக பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது எனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், தங்கள் உணவகத்தின் பெயரை பயன்படுத்தி பிரியாணி விற்பனை செய்ய தடைவிதிக்கக் கோரியும் ஆம்பூர் பிரியாணி உணவக உரிமையாளர் அனீஸ் அகமது தனது வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி' பெயரை, திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி உணவகம் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பரோட்டா சூரி போல் பிரியாணி ராகுல்! 9 நிமிடங்களில் ஒரு கிலோ பிரியாணி!

ABOUT THE AUTHOR

...view details