தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்! - cremate the bodies of those died by corona

சென்னை: கரோனா தொற்றால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்ட உடல்களைக் கொண்டுவரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

corona death
corona death

By

Published : May 13, 2021, 9:48 AM IST

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் போதிய படுக்கை, ஆக்சிஜன் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே சிகிச்சைக்காக ஏராளமானோர் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் போதுதான் இப்பிரச்னை என்றால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்டவும் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன.

சென்னையில் அம்பத்தூர் மின்மயானத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எரிப்பதற்கு நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன. ஒரு சடலத்தை எரிப்பதற்கு சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் ஆவதாக அன்புக்குரியவர்களைப் பறிகொடுத்து விட்டு காத்திருக்கும் உறவினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:உரிய நேரத்தில் 20 ஆக்ஸிஜன் சிலிண்டர் - சென்னை காவல்துறைக்கு குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details