சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜோதி முகமது. இவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளி ஒருவரைத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக்கொண்டு, சேலத்தில் இறக்கிவிட்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.