தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மெட்ரோ நிலையங்களுக்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர்கள் வைக்க வேண்டும்': பாஜக கோரிக்கை - Metro Railway Station

சென்னை: பாரிமுனை, சென்னை விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர்கள் வைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Ambedkar and Vajpayee names for the metro station: TN BJP Petition To Chief Secretary
Ambedkar and Vajpayee names for the metro station: TN BJP Petition To Chief Secretary

By

Published : Jul 31, 2020, 7:18 PM IST

சென்னை பாரிமுனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரும், சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரும் வைக்கக்கோரி தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் நாகராஜன், கே.டி.ராகவன், மாநில துணைத்தலைவர் எம்.என். ராஜா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்தனர்.

பின் கே.டி.ராகவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களான ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சூட்ட இருப்பதாக வந்த அறிக்கையை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது.

பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் நாகராஜன், கே.டி.ராகவன்

அதே போன்று இந்தியாவின் போக்குவரத்து, நவீன தொழில் நுட்பம், கல்வித் துறை, பாதுகாப்புத் துறை, விவசாயத் துறை எனப் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களைக் கொண்டுவந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவருடைய பெயரையும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் சூட்ட வேண்டுமென தலைமைச் செயலாளரிடம் கோரியுள்ளோம்.

குறிப்பாக அடல் பிகாரி வாஜ்பாய் அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் முதன் முதலாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, மத்திய அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. சென்னையில் முக்கியப் பகுதிகள் அனைத்திற்கும் மெட்ரோ ரயில் சேவையில் இணைக்கப்பட்டு மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

மீதமுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளோம்'' என்றார்.

இதையும் படிங்க:திருவள்ளூரில் பெரியார் சிலை அவமதிப்பு... காவலர்கள் குவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details