சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கணபதி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதி. இந்நிலையில் நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர் இவரது வீட்டிற்கு வந்து உங்களது கணவருக்கு ரயில்வேயிலிருந்து ஐந்து ஆயிரம் ரூபாய் பணம் வந்திருப்பதாகவும், தான் ரயில்வே ஊழியர் எனவும் கூறியுள்ளார்.
அந்த நபரிடம் சரஸ்வதி, நீ யார்? எங்கிருந்து வருகிறாய் என வீட்டின் உள்புறமாக நின்றபடி விசாரித்துள்ளார். அப்போது, அந்த நபர் திடீரென்று அவரின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது கொள்ளையன் தயாராக இருந்த இருவருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரியவந்தது.