அமேசான் நிறுவனம் தமிழ்நாட்டில் ஏழு லட்சம் கன அடி (cubic feet) அளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு ஒன்றை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவியுள்ளது. இதில் லட்சக்கணக்கான மின்னணு சாதனங்கள், பிற பொருட்களை விற்பனையாளர்கள் சேமித்து வைக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பொன்னேரியில் உள்ள மற்றொரு சேமிப்புக் கிடங்கை விரிவுபடுத்தி உள்ளது. மொத்தமாக ஐந்து சேமிப்புக் கிடங்குகள் மூலம் தமிழ்நாட்டில் 30 லட்சம் கன அடி அளவுக்கு சேமிப்பு வசதி உள்ளதாகவும், இதன்மூலம் இங்குள்ள 43 ஆயிரம் விற்பனையாளர்கள் பயன்பெறுவர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமேசான் போக்குவரத்து பிரிவு இயக்குநர் அனுபவ் சிங் பேசுகையில், "தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தை. இங்கு மேலும் விரிவுபடுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலமாக மாநிலத்தில் உள்ள சிறு, குறு விற்பனையாளர்கள் பலன் பெறுவர். அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்கள் வந்து சேரும்" என்றார்.
அமேசான் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்து பேசிய தமிழ்நாடு தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், "இதன் மூலம் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி மேம்படும், சிறு, குறு நிறுவனங்கள் தங்களை வளர்த்துக்கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும்" என்றார்.
இதையும் படிங்க...அவதூறு பரப்பிய விவகாரம்: பிரபல பல் மருத்துவரை ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம்!