தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 திருநங்கைகளுக்கு காவலர் பணி! - medical college

சென்னை: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

விஜயபாஸ்கர்

By

Published : Jun 19, 2019, 7:42 PM IST

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவப் பிரிவு அமைந்துள்ளது. இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 60 வரையிலான பிரசவங்கள் நடக்கின்றன. வருடத்திற்கு ஏறக்குறைய சுமார் 14 ஆயிரம் பிரசவங்கள் நடக்கின்றன. எனவே, 24 மணி நேரமும் இயங்கும் இப்பிரிவில் மக்களின் சேவைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதன்முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் (அவுட் சோர்சிங்) பணி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் விஜய பாஸ்கர்

இதற்கான, பணி நியமன ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் சுகாதாரத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும், திருநங்கைகள் எட்டு பேர் காவலர் பணிக்கு ஒப்பந்தம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details