சென்னை கலைவாணர் அரங்கத்தில் இரண்டாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
இரங்கல் தீர்மானம் வாசிப்பு:
அப்போது மு.பாண்டுரங்கன், அ. முஹம்மத் ஜான் உள்ளிட்ட 13 சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பிரபல திரைப்பட நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், கி . துளசி அய்யா வாண்டையார், சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய அரசியல் நிர்ணய உறுப்பினருமான டி.எம். காளியண்ணன் ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
நடிகர் விவேக்கிற்கு புகழாரம் சூட்டிய சபாநாயகர்:
நடிகர் விவேக் மறைவு திரையுலகிற்கும் பேரவைக்கும் பெரிய இழப்பு; விவேக் மரம் நடுதல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டவர், 'சின்ன கலைவாணர்' என்றழைக்கக்கூடியவர், என்று சபாநாயகர் அப்பாவு புகழாரம் செலுத்தினார். பின்னர் சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா, துரை சந்திர சேகரன் ஆகியோரை பேரவையின் மாற்றுத்தலைவர்களாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உதயசூரியனின் உரையைத் திருத்திய ஸ்டாலின்!