கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றத்தில் நேற்று(ஜூலை 18) உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்தது. இதற்கிடையில் தங்கள் தரப்பு மருத்துவரை உடற்கூராய்வு குழுவில் சேர்க்கக்கோரியும், அதுவரை உடற்கூராய்வுற்குத் தடை விதிக்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை மாணவியின் பெற்றோர் தரப்பில் முறையிடப்பட்டது.
ஆனால், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், உடற்கூராய்விற்குத் தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றும், உடற்கூராய்வு நிபுணர்கள் வந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.