சென்னை: ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக , அங்கு படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களை ஆப்ரேஷன் கங்கா மூலம் மத்திய அரசு மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்தது. இதையடுத்து போர் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஆன்லைன் வகுப்புகளும் நிறுத்தப்பட, மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்தியாவிலேயே மருத்துவப்படிப்பை தொடர அனுமதியுங்கள் - மத்திய அரசுக்கு வலியுறுத்தும் மாணவர்கள் - கலந்தாய்வு
உக்ரைன் - ரஷ்யப் போர் காரணமாக மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் , தாங்கள் இந்தியாவிலேயே படிப்பைத் தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த 200க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் , தங்களது பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது தங்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே படிப்பைத் தொடர மத்திய அரசினை அனுமதிக்குமாறு முழக்கங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ் படிப்பில் இன்னும் நிரப்பப்படாத காலி இடங்கள் - கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி