தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மாமல்லபுரத்திற்குச் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்திடுக’ - வைகோ - Allow tourists

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதித்திட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Allow tourists to see Mamallapuram sculptures sayAllow tourists to see Mamallapuram sculptures says mdmk gs Vaikos mdmk gs Vaiko
Allow tourists to see Mamallapuram sculptures says mdmk gs Vaiko

By

Published : Nov 20, 2020, 4:32 PM IST

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, "உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களைப் பார்வையிடுவதற்கு நாள்தோறும் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கண்ணுக்குத் தெரியாத உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் கிருமி மனிதகுலத்தின் மீது நடத்திக் கொண்டு இருக்கும் உயிரியல் யுத்தத்தின் காரணமாக அணு ஆயுத வல்லரசு நாடுகளே தங்களின் குடிமக்களை கரோனா பலி பீடத்தில் இழந்துள்ள நிலையில் இந்தியா அதில் விதிவிலக்காக இருக்க முடியாது.

இதன் காரணமாக மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் முடங்கி விட்டது. சர்வதேச விமானங்கள் இயக்கப்படாத நிலையில், அன்னிய செலவாணிகள் ஈட்டித்தரும் சுற்றுலா தொழில் முழுவதுமாக முடங்கி, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாவை நம்பி இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களும், நூறு விழுக்காடு வாழ்வாதாரம் பாதித்துள்ளனர்.

இந்நிலையில் கரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருவதால் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வார விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளனர். பலர் ‘கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்கோன் கண்ட மல்லை பாரெங்கும் தேடினும் ஊர் ஒன்று இல்லை’ என்ற பாடல் வரிக்கு இலக்கணமாகத் திகழும் பல்லவர் கால சிற்பங்களையும், அழகிய கடற்கரையையும் பார்க்க மாமல்லபுரம் வருகின்றார்கள்.

உள்ளரங்கில் இயங்கும் திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள், மது பார்கள், அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்கள் போன்று இல்லாமல் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் திறந்தவெளியில்தான் உள்ளன. ஆனால், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான சின்னங்களைச் சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் பூட்டப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கரோனா பரவலுக்கான சாத்திய கூறுகள் குறைவு என்பதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிற்பங்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கவும், சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரம் இழந்து வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களின் நலன் கருதியும் மத்திய மாநில அரசுகள் மேலும் கால நீட்டிப்பு செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து உதவிட அன்புடன் வேண்டுகின்றேன்" என்றார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு ரூ. 250 கோடி நிதி ஒதுக்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details