தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முடி திருத்தும் கடைகளை காலை 6 முதல் 1 மணிவரை திறக்க அனுமதியுங்கள்! - கரோனா தொற்று பரவல்

முடிதிருத்தும் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சிகை அலங்கரிப்போர் நல சங்கத்தினர் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Allow barber shops to open from 6 am to 1 pm workers demand
Allow barber shops to open from 6 am to 1 pm workers demand

By

Published : Apr 28, 2021, 4:37 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் திரையரங்குகள், அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள், பெரிய கடைகள் உள்ளிட்டவை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், சுகாதாரச் செயலாளர் ஆகியோரை சிகை அலங்கரிப்போர் நல சங்கத்தினர் நேரில் சந்தித்து, முடிதிருத்தும் கடைகளைத் திறக்கக்கோரி மனு வழங்கினர்.

முடிதிருத்தும் கடைகளைத் திறக்க அனுமதியுங்கள்

பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சிகை அலங்கரிப்பு நல சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் பேசுகையில், "தமிழ்நாட்டிலுள்ள முடிதிருத்தும் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை திறக்க அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ள கரோனா நடவடிக்கைகளைப் பின்பற்றி, கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

தற்போது அதிலிருந்து மீண்டு வரும் சூழலில் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர், வருவாய்த் துறைச் செயலாளர், சுகாதார செயலாளரிடம் கோரிக்கை மனு வழங்கி உள்ளோம். எனவே, இதுகுறித்து உடனடியாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details