புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கடந்த 1997ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.
தங்கள் கட்சிக்கு 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம்.
தங்கள் கட்சிக்கு பொது சின்னமான தொலைக்காட்சி சின்னத்தை மீண்டும் தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். குறிப்பாக தொலைக்காட்சி சின்னத்தைப் போல கரும்பலகை, குளிர்சாதனப் பெட்டி, எழுது பலகை, தீப்பெட்டி போன்ற சின்னங்கள் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.