தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசியில் சரக்கு தராத டாஸ்மாக் விற்பனையாளரின் முகத்தை வெட்டிய மதுப்போதை ஆசாமிகள் - மர்ம நபர்

காஞ்சிபுரம் அருகே ஓசியில் சரக்கு தராத டாஸ்மாக் விற்பனையாளரின் முகத்தை வெட்டிய மதுப்போதை ஆசாமிகள் இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுப்போதை ஆசாமிகள்
மதுப்போதை ஆசாமிகள்

By

Published : Oct 10, 2021, 1:58 PM IST

காஞ்சிபுரம்: ஈஞ்சம்பாக்கம் அருகே அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இக்கடையில் டாஸ்மாக் விற்பனையாளர்களான திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த கோபி வயது (47), ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் வழக்கம் போல் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஏற்கனவே மது போதையில் இருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், இக்கடைக்கு வந்து இரண்டு குவாட்டர் மதுபானங்களை வாங்கியுள்ளனர். இதைதொடர்ந்து கடை விற்பனையாளர் கோபி மதுபானத்திற்குரிய பணத்தை கேட்டப்போது பணம் தர முடியாது எனக்கூறி ஓசியில் சரக்கை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை வைத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர் கோபியின் முகத்தை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றனர்.

படுகாயமடைந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர் கோபி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது முகத்தில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இது குறித்து தகவலறிந்த காஞ்சி தாலுகா காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளையும் நேற்று(அக்.09) மாலை முதல் டாஸ்மாக் பணியாளர்கள் மூடியுள்ளனர்.

இதனால் மது வாங்க மதுப்பிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் தவித்தனர்.

இதையும் படிங்க:லக்கிம்பூர் வன்முறை; ஒன்றிய அமைச்சர் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

ABOUT THE AUTHOR

...view details