சென்னை: கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலை 2ஆம் தேதி முதல் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்குமான பொதுத் தளர்வுகளை அறிவித்தார். இதில் கல்லூரிகள், கோயில்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்கும்! - இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்கும்
இதுவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத பகுதிகளிலும் இன்று (ஜூலை 5) முதல் கடைகள் திறக்கப்படுகின்றன.
Tasmac open today
அதேபோல், கரோனா தொற்று அதிகமாக இருந்த மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இதுவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத பகுதிகளிலும் இன்று (ஜூலை 5) முதல் கடைகள் திறக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்