சென்னை கிண்டியில் இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சுதந்திரமாக, நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியினர் மக்களின் கொள்கைகளை நம்பாமல் பணத்தை வெள்ளம்போல் அள்ளித் தெளித்து குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்கிறது.