சென்னை தலைமை செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்து கட்சியினருடன் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வாக்காளர் திருத்தப்பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!
சென்னை: தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
all party meeting in secretariat for local body election
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறியதாவது,
- வாக்காளர்களே தங்களின் கைப்பேசி மூலமோ, கணினியின் மூலமோ வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள திருத்தங்களை இந்திய அரசு வெளியிட்டுள்ள செயலியின் மூலம் சரிசெய்யலாம்.
- முதல் தலைமுறை வாக்களார்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை இ - சேவை மையத்தில் சென்றும் பதிவு செய்யலாம். இதற்கு ஒரு ரூபாய் 18 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
- முதல் தலைமுறை வாக்களார்களும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி நிலையங்கள் குறித்த தகவல்களையும் செயலியின் மூலமே தெரிந்துகொள்ளலாம்.
- தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு செப்டம்பர் மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும்.
- வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை செய்யத் தவறியவர்களுக்கான திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும்.
- அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 2,3 மற்றும் 10,11 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பெயர் நீக்கம், சேர்ப்பு, வாக்களர் அட்டையிலுள்ள பிழைகள் திருத்தும் பணிகள் நடைபெறும்.
- இந்த திருத்தப்பணிகள் முடிக்கப்பட்டு, இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்றார்.
Last Updated : Aug 28, 2019, 8:38 PM IST