தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விலக்கு மசோதா 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அனைத்துக்கட்சி கூட்டம்

சமூக நீதி போராட்டத்தை முன்னெடுக்கவே அனைத்துக்கட்சி கூட்டம் எனத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு மசோதா 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

all-party-meeting-for-against-neet-exam
all-party-meeting-for-against-neet-exam

By

Published : Feb 5, 2022, 1:08 PM IST

Updated : Feb 5, 2022, 1:56 PM IST

சென்னை : நீட் தேர்வுக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்தாண்டு (2021) செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதா ஒன்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது.

இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, 2022 பிப்.1ஆம் தேதி திருப்பி அனுப்பினார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் இந்த மசோதா மாணவர்கள் நலனுக்கு எதிரானதாக உள்ளதாக கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று (பிப்.5) நடத்தினார். இதில், பாஜக, அதிமுக தவிர பாமக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஆளுநர்

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் 142 நாள்கள் வரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு, அதன் பின்னர் இந்த சட்ட மசோதா, நீட் தேர்வு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக கூறி திருப்பி அனுப்பி 8 கோடி தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக திருப்பி அனுப்பி உள்ளார்.

மேலும், 2006ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒன்றிய அரசில் உள்ள உயர் கல்வித் துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகம், மக்கள் நச்வாழ்வு துறை அமைச்சகம் உள்ளிட்டவை ஒப்புதல் அளித்தது.

சட்டம் இயற்றும் அதிகாரம்

இந்நிலையில் அதற்கு குடியரசுத் தலைவரும் அனுமதி அளித்தார். உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு செல்லும் என தீர்ப்பு அளித்திருந்தாலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

சமூக நீதிக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு ஆதரவு தரவேண்டும்” எனக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில் இறுதியில் பேசிய முதலமைச்சர் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொண்டுவரக்கூடிய வரைவு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் விவாதம் நடத்துமாறும், இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டமாக எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்து கருத்துக்களை தெரிவிக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க : நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி போராட்டம்- மு.க. ஸ்டாலின்!

Last Updated : Feb 5, 2022, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details