தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காகவும்; அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் முதலமைச்சர் தலைமையில் 13 கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க அனைத்துக் கட்சி குழு: தமிழ்நாடு அரசு அதிரடி!
19:36 May 16
அதன்படி திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அதிமுக சார்பில் மருத்துவர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பில் முனிரத்தினம், பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி, மமக சார்பில் ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி, கொமதேக சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன், மதிமுக சார்பில் மருத்துவர் சதன் திருமலைக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாலி உள்ளிட்ட 13 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு: தமிழ்நாடு அரசு உத்தரவு