சென்னை:அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் துறை அலுவலகத்தில் அஞ்சல் துறை சார்பாக நடத்தப்படும் 34ஆவது அகில இந்திய கால்பந்து போட்டி குறித்து துறை தலைவர் ராஜேந்திர குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை அஞ்சல் துறை நடத்தும் 34ஆவது அகில இந்திய கால்பந்து போட்டி நடைபெறவுள்ளதாகவும், இந்த போட்டியில் அசாம், டெல்லி, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, ஒரிசா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளதாகவும், வரும் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் இந்த போட்டி நடைபெறும் என்றும் இந்தப் போட்டியில் முக்கிய விருந்தினராக சதன் ரயில்வே பொது மேலாளர் மல்லையா சதன் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர். சர்வதேச கால்பந்து போட்டியில் கோல் கீப்பராக இருந்த சதீஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றும் அகில இந்திய அளவில் அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் போட்டி என்பதால் மத்திய அமைச்சர்கள், அலுவலர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கும் முறை நடைமுறையில் உள்ளதாகவும், இனி இந்திய அஞ்சல் துறை சார்பில் தமிழ்நாட்டில் எந்த போட்டிகள் நடைபெற்றாலும் தமிழ்நாடு அரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறினார்.