தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி மறுப்பு?"

All india council for technical education strikes down
All india council for technical education strikes down

By

Published : Sep 4, 2020, 1:59 PM IST

Updated : Sep 4, 2020, 3:36 PM IST

13:54 September 04

சென்னை: பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்கிற தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்கமுடியாது என அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் பொறியியல் மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவவர்களை தவிர்த்து பிற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இறுதி ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், "அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் இது பற்றி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த பருவத்தில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய பாடங்களுக்கு மட்டுமே தேர்ச்சி வழங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை கடைபிடித்து நாங்கள் செயல்பட வேண்டியுள்ளது . எனவே, விதிமுறைகளை மீறி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க முடியாது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணி செய்வோர்’ - முதலமைச்சர் வாழ்த்து!

Last Updated : Sep 4, 2020, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details