தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஹில் ரமாணிக்கு தொடர் நெருக்கடி: அகில இந்திய பார் கவுன்சில் அதிரடி அறிவிப்பு! - தஹில் ரமாணி

சென்னை: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் முடிவை ஏற்று தஹில் ரமாணி உடனடியாக மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என அகில இந்திய பார் அசோசியேஷன் தலைவர் தெரிவித்துள்ளார்.

tahilramani

By

Published : Sep 12, 2019, 3:04 PM IST

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஏற்கனவே பல உயர் பதவிகள் கொலிஜியத்தால் வழங்கப்பட்டுவிட்டன. மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதை ஏற்க மறுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் குடியரசுத் தலைவருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இல்லாததால் நாள்தோறும் சட்டப் பணிகள் பாதிக்கப்படுகிறது.

தொடர்ந்து காலதாமதம் செய்வது கொலிஜியத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட கொலிஜியத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டலை பணியிடமாறுதல் தொடர்பான பரிந்துரை மீது தகுந்த உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பிக்க வேண்டும் என அகில இந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் முடிவை ஏற்று தஹில் ரமாணி உடனடியாக மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details