தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து அரசு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

By

Published : Jan 22, 2022, 10:12 PM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய இ- சேவை மையங்கள் தொடங்குவதற்கான முகமை ஆணைகளை 36 நபர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (ஜன.22) வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் கீழ் பிரவுசிங் சென்டர்கள் மூலம் புதிதாக 36 நபர்களுக்கு இ-சேவை மையம் அமைப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து திட்டங்களும் கணினி மயமாக்கப்பட்டு மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு இணைய தளம் மூலம் திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த சேவை வெகுவிரைவில் நடைமுறைக்கு வரும். நடைமுறைக்கு வந்ததும் தற்போது உள்ள இணையதள பிரச்சனைகள் சீராகும்" என்று தெரிவித்தார்.

மேலும், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் இணையதள பயிற்சி வழங்கப்பட்டுவருவதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: தேர்தல் பேரணிகளுக்கு ஜன.31 வரை தடை!

ABOUT THE AUTHOR

...view details