ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்ததாரார்கள் எவ்வித முன் அறிவிப்புமின்றி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், பொதுமக்களுக்கு பால் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் நிலவியுள்ளது.
இதற்கிடையில் பால்வளத்துறை ஆணையர் வள்ளலார் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை பெருநகருக்கும் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டுச் செல்ல மாவட்ட துணை பதிவாளர்கள், பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படாது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'ஆவின் பால் தடையின்றி கிடைக்க ஏற்பாடு' - ஆவின் பால் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
சென்னை: பொதுமக்களுக்கு ஆவின் பால் தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
aavin
இதையும் படிங்க:ஆவினின் புதிய ரக பாக்கெட் பால் அறிமுகம்...!