தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்து கடைகளுக்கு சீல் வைப்பு - வியாபாரிகள் முற்றுகை!

சென்னை: ஆதம்பாக்கத்தில் தொழில் உரிமம் பெறாத பத்து கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Regional
Regional

By

Published : Mar 15, 2020, 6:18 AM IST

சென்னை மாநகராட்சி சார்பில் தொழில் உரிமம் பெறாத வணிக நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், நோட்டீஸ் அனுப்பியும் தொழில் உரிமம் பெறாமல் ஆதம்பாக்கத்தில் சில கடைகள் செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, ஆதம்பாக்கத்தில் உள்ள 20 கடைகளுக்கு சீல் வைக்க ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் முருகன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் ஆலந்தூர் வருவாய் உதவி அலுவலர் யுகமணி தலைமையில் பத்து கடைகளுக்கு வருவாய் அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக வட்ட செயலாளர் ஜெகதீஸ்வரன் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மாநாகராட்சி அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அலுவலர்கள் , " உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. உரிமம் பெற முறையான விண்ணப்பங்களை தந்து உரிமம் பெற்றால் சீல் அகற்றப்படும் என தெரிவித்தனர். இது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. தா.மோ அன்பரசனுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உரிமம் இல்லாத 10 கடைகளுக்கு சீல் வைப்பு

அவர் நேரடியாக உதவி கமிஷனரிடம் பேசி, உரிமம் பெற ஒரு நாள் கால அவகாசம் தந்தால் வியாபாரிகள் பெற்றுக் கொள்வார்கள் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து அலுவலர்கள் மற்ற கடைகளுக்கு சீல் வைப்பதை நிறுத்தினர். மேலும், சீல் வைத்த கடைகளின் உரிமையாளர்கள் தொழில் உரிமத்தை பெற்றால் சீல் அகற்றப்படும். உரிமம் பெறாமல் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் உடனே உரிமம் பெற வேண்டும் என அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:குமரியில் 10 ரூபாய்க்கு சிக்கன் 65 - கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி!

ABOUT THE AUTHOR

...view details