சென்னை:திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒருபகுதியாக உள்ளது ஆலந்தூர் தொகுதி. ஆலந்தூர் தொகுதியில் 1967ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக ஏழு முறையும், அதிமுக ஐந்து முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1967, 1971 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்ஜிஆர் வென்ற தொகுதியும் இதுதான். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமசந்திரன் வெற்றிபெற்றார். பின்னர், அவர் 2013இல் அந்தப்பதவியில் இருந்து விலகியதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.என்.பி வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட தா.மோ.அன்பரசன் எதிர்த்துப் போட்டியிட்ட பண்ருட்டி ராமசந்திரனை விட 19 ஆயிரத்து 169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
களம்
மணப்பாக்கம், கவுல் பஜார் கிராமம், நந்தம்பாக்கம், செயின்ட் தாமஸ்மவுண்ட், ஆலந்தூர், மூவரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய இத்தொகுதியில், வழிபாட்டுத் தலங்கள் அதிகம் இருக்கிறது. மயிலாப்பூர், மாம்பலம் தொகுதிக்கு அடுத்தபடியாக, பிராமணர்கள் அதிகம் இருக்கும் தொகுதியாகவும் இது விளங்குகிறது. பழமை வாய்ந்த புனித தோமையார் மலை கிறிஸ்துவ ஆலயமும் இங்குள்ளது. சென்னை விமான நிலையம், இத்தொகுதிக்கு வெகு அருகிலுள்ளது. புனித தோமையார் மலை துணை ஆணையர் அலுவலகம் இத்தொகுதியில் இயங்கிவருகிறது. புனித தோமையார் மலை அடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் அலுவலர் பயிற்சி மையம் (Officer Training Academy [OTA]) அமைந்துள்ளது.
மக்களின் கோரிக்கை