தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நடைபெற்ற திமுகவின் அனைத்து கட்சி கூட்டம்!

சென்னை: திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற  திமுகவின் அனைத்து கட்சி கூட்டம்
alagiri_thiruma

By

Published : Jan 24, 2020, 4:41 PM IST

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகிய மூன்றை பற்றி ஆலோசனை நடத்த திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ”கட்சி கூட்டத்தில் அரசியலுக்கு அப்பால் பொதுமக்களை சென்று அடைய உள்ளோம். பொது மக்களிடம் எடுத்த செல்ல வேண்டும் என்று இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளோம், அதே போல் அரசு அலுவலர்கள் தகவல்களை சேகரிக்க வரும்போது அதை மக்கஆள் புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார்.

அழகிரி செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணையம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது வேதனையானது. இதுகுறித்து அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: அருந்ததியினருக்கு வழங்கிய இலவச வீட்டு மனை: ஆதிதிராவிட நலத்துறை அபகரிக்கப்பதாக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details