தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக அறக்கட்டளைகளை பொதுவுடைமையாக்க முடியாதா? - ஹெச். ராஜாவுக்கு அழகிரி பதிலடி - h raja

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வரும்போது பெரியார் அறக்கட்டளை பொதுவுடைமையாக்கப்படும் என ஹெச். ராஜா கூறியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக அறக்கட்டளைகளை பொதுவுடைமையாக்க முடியாதா? - ஹெச். ராஜாவுக்கு அழகிரி பதிலடி
பாஜக அறக்கட்டளைகளை பொதுவுடைமையாக்க முடியாதா? - ஹெச். ராஜாவுக்கு அழகிரி பதிலடி

By

Published : Jan 24, 2020, 11:19 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தந்தை பெரியார் தன்னுடைய பொது வாழ்க்கையை சீர்திருத்தம், புரட்சி, மூடநம்பிக்கை ஒழிப்பு, மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற விஷயங்கள் மூலம் தொடங்கினார். அது அவருடைய கொள்கை. ராஜாஜி அவர்கள் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை உடையவராக இருந்தார். ஆனால் ராஜாஜியும் பெரியாரும் சிறந்த நண்பர்களாக விளங்கினார்கள். கொள்கை என்பது வேறு, பழக்கவழக்கங்கள் நட்பு என்பது வேறு.

பெரியார் தனக்குப்பட்டதை மட்டும் கூறினார். அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர்களுடைய விருப்பம். ஆனால் சில காட்டுமிராண்டிகள் அவருடைய சிலையை உடைத்துள்ளனர். இதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது தமிழர்களின் பெருமையை சீர்குலைக்கும் என்றார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் அறக்கட்டளை பொதுவுடைமையாக்கப்படும் என ஹெச். ராஜா கூறிய கருத்து பற்றி கேட்டதற்கு, இது சர்வாதிகார பேச்சு, மத்தியில் ஆட்சி மாறும்போது பாஜக அறக்கட்டளைகளை பொதுவுடைமையாக்க முடியாதா என கேள்வி எழுப்பினார். இது தேவையற்ற பேச்சு என தெரிவித்தார்.

பாஜக அறக்கட்டளைகளை பொதுவுடைமையாக்க முடியாதா? - ஹெச். ராஜாவுக்கு அழகிரி பதிலடி

மேலும் அவர், செய்திகளை வெளியிடுவதற்கு முன் செய்தியின் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் யாரை வேண்டுமானாலும் சிறுமைப்படுத்த முடியும். இது மனித நாகரிகத்தை மிருக நாகரிகத்திற்கு எடுத்துச் செல்வது போல் இருக்கிறது.

வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகள் கெட்டுப் போகின்றனர். வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் 99% தவறான செய்திகள். இதற்கு எதிராக கடிவாளம் போடுவதற்கு நீதிமன்றம் எடுத்திருக்கின்ற முடிவை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்கும் எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details