டெல்லி சிறப்பு பிரதிநிதியானார் ஏ.கே.எஸ்.விஜயன்! - AKS Vijayan

11:15 June 14
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயனை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ்.விஜயன் திமுக விவசாய அணியின் செயலாளராக உள்ளார்.
மாநில அமைச்சர் பதிவுக்கு இணையான இந்த பதவியில் விஜயன் ஓராண்டு காலம் நீடிப்பார் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தளவாய்சுந்தரம் டெல்லி பிரதிநிதியாக இருந்தார்.
டெல்லி சிறப்பு பிரநிதியின் முக்கிய பணிகள்:
- இப்பதவியில் இருப்பவர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும்.
- கேபினட் அந்தஸ்து கொண்ட இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கென தலைமை செயலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்படும்.
- தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளிலும் இந்தப் பதவி முக்கிய அங்கம் வகிப்பதால் விஜயன் முக்கியமான விவாதங்களில் பங்கேற்பார்.
- தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கும் போது இவரும் உடனிருப்பார்.