சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துக் கடந்த 2014-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் வீரம். இதே நாளில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் அஜித் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நரைமுடியுடன் படம் முழுவதும் வேட்டி சட்டையில் வலம் வந்திருப்பார்.
சிவாவின் மாஸான இயக்கத்தால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்துடன் விஜய் நடிப்பில் ஜில்லா படமும் வெளியானது. ஆனால், வீரம் படத்தின் வெற்றியை ஜில்லாவால் நெருங்க முடியவில்லை. வீரம் படத்தைத் தொடர்ந்து, சிவா கூட்டணியில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாகத் தொடர் வெற்றிப்படங்களை அஜித் கொடுத்துள்ளார்.