சென்னை: எச்.வினோத் - அஜித் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
படத்தின் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. படத்தின் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தின் அஜித்தின் லுக் மிகவும் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இப்படத்துடன் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. எனவே இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிடுகிறது.