டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அங்கு மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை சந்தித்துப் பேசினார். நேற்று மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பிய அவர்சென்னை விமானநிலையத்தில் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என ஒன்றரை ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தேன். இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசினேன். விமான நிறுவனங்கள் 3 மொழிகளில் அறிவிப்பு செய்வது குறித்து சிரமப்பட்டனர்.
பிரதமர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார். முதலமைச்சரும் பல முறை இதுகுறித்து வலியுறுத்தினார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது” என்றார்.
இந்தத் தாமத்ததிற்கு அலுவல் மற்றும் ஆட்சி மொழி அமுல்படுத்தும் குழு ஒப்புதல் தராததும் காரணம் எனக் கூறிய அமைச்சர், தமிழ்நாட்டில் விமான நிலையங்களின் அறிவிப்புகளில் இனி முதன்மை மொழியாக தமிழ் இருக்கும் என்றார்.
தொடர்ந்து அவர் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய சிலைகள் பற்றிய பேசும்போது,” ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து சிலைகள் வரவுள்ளன. அதில் வழிப்பட கூடிய சிலைகள் கோயிலுகளிலும், வழிப்பாடாதவைகள் அருங்காட்சியகத்திலும் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே, திரும்பி வந்த பல சிலைகள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துள்ளன.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் 160க்கும் மேற்பட்ட கலை பொக்கிஷங்கள் திரும்பி வந்துள்ளன. பல வெளிநாட்டு அருங்காட்சியகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலைகளைத் திரும்ப வாங்க முடியும். சோழ வரலாற்றை செய்யப்பட்ட ஆவணங்கள் திரும்பி தர தயாராகவுள்ளனர். மத்திய அரசு முலமாக மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் 5 அருங்காட்சியகங்களை உலக தரத்திற்கு தரம் உயர்த்த பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எழும்பூர் அருங்காட்சியகத்தை தரம் உயர்த்த ரூ.146 கோடிக்கு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளோம். இதில் 13 அம்சங்களில் 2 அம்சங்களை தமிழ்நாடு அரசே செய்ய உள்ளது. எழும்பூர் அருங்காட்சியகம் புதுபொலிவுடன் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 11 அம்சங்களில் 1 அம்சத்திற்கு உத்தரவை மத்திய அமைச்சர் வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் அரண்மனை, தரங்கம்பாடியில் பழைய அரண்மனையைப் புதுப்பிக்க நிதியுதவி தருவதாக சொல்லி உள்ளனர். கரோனா காரணமாக துறைக்கு அரசு செலவு செய்யக்கூடிய நிதி குறைந்துவிட்டது. மத்திய அரசு தரும் நிதியை உறுதி செய்ய டெல்லி சென்றேன். 7 தொல்லியல் இடங்களில் ஆய்வு செய்ய கேட்டு உள்ளோம். கீழடியில், 4 இடங்களில் நடப்பது போல் ஆதிச்சநல்லூரிலும் 4 இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம். இதற்கான அனுமதி கிடைக்கும்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி தமிழை அலுவல் மொழியாக மத்திய அரசே அறிவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். இதை மத்திய அரசு அறிவித்தால் எல்லா இடங்களிலும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற அண்ணாவின் கொள்கை எடப்பாடி பழனிச்சாமியால் நிறைவேற்றி வைக்கப்படும்”என்றார்.
இதையும் படிங்க:பாஜகவினர் பங்கேற்கும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் திமுக, அதன் தோழமைக் கட்சிகள் இனி பங்கேற்காது!