தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரீஸ் முதல் சென்னை: புதிய விமான சேவை தொடக்கம்! - chennai international airport

பாரீஸிலிருந்து சென்னைக்கு புதிய விமான சேவையினை, ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் (AIRFRANCE AIRLINES) தொடங்கியுள்ளது.

விமான சேவை  flight service  chennai to france flight service  chennai to france new flight service  chennai news  chennai latest news  flight timing  flights availability  சென்னை செய்திகள்  சென்னை மாவட்ட செய்திகள்  பாரீஸ் டூ சென்னை புதிய விமான சேவை  பாரீஸ் டூ சென்னை புதிய விமான சேவை துடக்கம்  பாரீஸ் டூ சென்னை விமான  விமான நேரம்  விமான சேவைகள்  airfrance airlines  சென்னை விமானநிலையம்  சென்னை சர்வதேச விமான நிலையம்  chennai international airport  internationl airport
பாரீஸ் டூ சென்னை புதிய விமான சேவை

By

Published : Jun 27, 2021, 2:16 PM IST

சென்னை:பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸிலிருந்து சென்னைக்கு புதிய விமான சேவை ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் (AIRFRANCE AIRLINES) தொடங்கியுள்ளது.

வாராந்திர புதிய பயணிகள் விமானம்

பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோலே விமான நிலையத்திலிருந்து நேற்று (ஜூன் 26) காலை 10.25 மணிக்கு 111 பயணிகள், 19 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட ஏா்பிரான்ஸ் போயிங் ரக விமானம் இன்று (ஜூன் 27) நள்ளிரவு 12.25 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர்பிரான்ஸ் விமானம்....

இந்தியா மற்றும் பிரான்ஸ் தேசியக் கொடிகளுடன் வந்து சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை விமான நிலைய அலுவலர்கள் வரவேற்றனர். மேலும் இது சென்னை-பாரீஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர புதிய பயணிகள் விமானமாகும்.

நாளை புறப்பாடு

இதனைத் தொடர்ந்து விமானிகள், விமானப் பணிப்பெண்கள், விமான பொறியாளர்கள் அனைவருக்கும் மலர் மாலைகள் அணிவித்து, பூங்கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்றனர்.

அனைவருக்கும் மலர் மாலைகள் அணிவித்து, பூங்கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்பு

அதன்பின்பு விமான ஊழியர்கள் அனைவரும் ஓய்வுக்காக சென்னை நகரில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றனர். இந்த விமானம் மீண்டும் நாளை (ஜூலை 28) அதிகாலை 1.20 மணிக்குச் சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டுச் செல்கிறது.

இதையும் படிங்க:கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக குணமடைந்த 57,944 பேர்

ABOUT THE AUTHOR

...view details