போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்கள், தேவை இல்லாத பொருட்களைத் தீயிட்டு கொளுத்த வேண்டாம் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டது. இருப்பினும் இன்று சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை முதல் சென்னை மாநகர் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றின் தரக் குறியீடு மோசமாக உள்ளது. காற்றில் உள்ள நுண் துகள்கள் (PM 2.5) சென்னை மணலியில் 795 என அபாயகர அளவில் உள்ளது. சென்னை அமெரிக்கக் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் காற்றிலுள்ள நுண் துகள்கள் 595 என்ற அளவில் அபாயகரமாக உள்ளது.