தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கில் விமானப் பயணிகள் பயணிக்கலாம்: இந்த ஆதாரம் இருந்தால் போதுமாம்! - விமான பயணிகள் வழக்கம்

சென்னை: 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், விமானப் பயணிகள், தங்களது விமான டிக்கெட்கள் அல்லது போா்டிங் பாஸ்களைக் காட்டி பயணிக்கலாம் என சென்னை நிலைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கில் விமான பயணிகள் பயணிக்கலாம்: இந்த ஆதாரம் இருந்தா போதுமாம்!
முழு ஊரடங்கில் விமான பயணிகள் பயணிக்கலாம்: இந்த ஆதாரம் இருந்தா போதுமாம்!

By

Published : Jun 18, 2020, 4:46 PM IST

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய நான்கு மாவட்டங்களில், ஜூன் 19 அதிகாலை 12 மணியிலிருந்து, இம்மாதம் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் உள்நாட்டு விமானங்களின் நிலை என்ன? கால் டாக்ஸி, காா்கள் இயங்கவில்லை என்றால், அவா்கள் விமான நிலையத்திற்கு எப்படி வந்து செல்வாா்கள்? என்ற கேள்வி ஏற்பட்டது.

இதனையடுத்து இது குறித்து சென்னை விமான நிலைய அலுவலகம் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், 'சென்னை விமான நிலையத்தில் வழக்கம் போல், விமான சேவைகள் இயங்கும். பயணிகள் தங்களுடைய விமான டிக்கெட்கள் அல்லது போா்டிங் பாஸ்களை காட்டி கால் டாக்ஸிகள் புக் செய்து கொள்ளலாம். அதைப்போல், தனியாா் காா்கள், வாடகைக் காா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காவல் துறை வழியில் நிறுத்தி சோதனை செய்தால், விமான டிக்கெட் அல்லது போா்டிங் பாஸை காட்டினால் அனுமதித்துவிடுவாா்கள். அதற்காக மாநில அரசிடம் பேசி, அனுமதி வாங்கப்பட்டுள்ளது. எனவே, முழு ஊரடங்கு காலமான இந்த 12 நாட்களும் விமானப் பயணிகள் வழக்கம் போல் பயணிக்கலாம்' எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தளர்வு: தலைமைச் செயலர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details