தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமான ஒரே மாதத்தில் விமானப் பணிப்பெண் தற்கொலை! - newly married woman commits suicide

சென்னை: திருமணமாகிய ஒரே மாதத்தில் விமானப் பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

meenampakkam suicide
தம்பதி

By

Published : Oct 15, 2020, 3:53 PM IST

சென்னை கிண்டி அடுத்த மீனம்பாக்கம் ஏர்-இந்தியா குடியிருப்பில் சரண்குமார்(30), அன்பரசி தம்பதியினர் வசித்துவந்தனர். சரண்குமார், கப்பல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அன்பரசி (28) ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிவந்தார்.

இவர்களுக்கு கடந்த சமாதம் 13-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அன்பரசி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். சரண்குமார் உணவு வாங்க கடைக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டி இருந்தது.

இதையடுத்து, சரண்குமார் ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் தனது மனைவி அன்பரசி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்படி, விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக அன்பரசி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிப்பெண் என்பதால் விமான நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் யாராவது தொல்லை தந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என அவரது கணவர் சரண்குமாரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். அன்பரசிக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:மாமியார் கொடுமையால் சட்டப்பேரவைக்கு முன்பு தீயிட்டுத் தற்கொலை செய்த மருமகள்!

ABOUT THE AUTHOR

...view details