சென்னை: ஆவடியில் மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான படை வளாகங்கள் உள்ளன. இந்தப் படை வளாகத்தில் உள்ள விமானப்படை பிரிவில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் விஸ்வகர்மா (23) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
ஆகாஷ் வழக்கம் போல் இன்று (ஜூலை 12) கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் இருந்த பகுதியிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இதையடுத்து வளாகத்தில் இருந்த மற்ற வீரர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது ஆகாஷ் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவர் தனது கையில் வைத்திருந்த இன்சாட் வகை துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் தெரியவில்லை. முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படை வளாகத்தில் பணியில் இருந்தபோது ராணுவ வீரர் தற்கொலை செய்திருப்பதால், அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, உயர் அலுவலர்களின் தொந்தரவு , அல்லது குடும்ப பிரச்னை காரணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்