தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீட்பு விமானத்தில் 1.67 கிலோ தங்கம் கடத்தல் - 7 பேர் கைது - gold seized related news

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 1.67 கிலோ தங்கம், 4 கிலோ பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்களைக் கடத்திய ஏழு பேரை கைது செய்து சுங்கத்துறை விசாரணை நடத்திவருகிறது.

தங்கம்
தங்கம்

By

Published : Dec 22, 2020, 8:39 PM IST

துபாயிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் இன்று (டிச.22) அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

இதில் சந்தேகத்திற்கிடமாக இருந்த சென்னை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 7 பேரை சோதனையிட்டதில் அவர்கள் தங்கம் கடத்தியது தெரியவந்தது.

உள்ளாடைகள், சூட்கேசுகள், மின்சாதனப் பொருள்கள் என அனைத்திலும் தங்கக் கட்டிகள், தங்கத்தகடுகள், தங்க பேஸ்ட்கள் போன்றவற்றை மறைத்து வைத்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்திவரப்பட்ட தங்கம்

அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 1.67 கிலோ எடையுள்ளது என்றும், அதன் சா்வதேச மதிப்பு 97 லட்சம் ரூபாய் என்றும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

பதப்படுத்தப்பட்ட குங்குமப் பூ பறிமுதல்

இதுதவிர 4 கிலோ பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ பாா்சல்களும் சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இவற்றைக் கடத்திய ஏழு பேரையும் கைது செய்த சுங்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மின்சாதன பொருள்களில் வைத்து கடத்தப்பட்ட தங்கம்

இதையும் படிங்க:திருச்சி விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details