இது தொடர்பாக அக்குழு அனைத்து மாநில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், ”கணினி அறிவியல் சார்ந்த எம்சிஏ பட்டப்படிப்பு மூன்று ஆண்டு கால படிப்பாக இருந்துவருகிறது. இதனை, மற்ற முதுகலைப் படிப்புகள் போல இரண்டு ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என மாணவர்களிடமிருந்து வந்த தொடர் கோரிக்கையினை ஏற்று, தற்போது எம்சிஏ பட்டப்படிப்பு இரண்டு ஆண்டு பட்டப்படிப்பாக மாற்றப்படுகிறது. எம்சிஏ படிப்பிற்கான கல்வித்தகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.
இனி 2 ஆண்டுகளில் எம்சிஏ பட்டம் பெறலாம்! - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்
சென்னை: மூன்று ஆண்டுகளாக இருந்த எம்சிஏ முதுகலை பட்டப்படிப்பு இனி இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது.
AICTE reduced mca course duration from three to two years
எம்சிஏவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் கணிதம் தொடர்புடைய பாடத்தையும், இளநிலை கணினி அறிவியல், இளநிலை வணிகவியல், இளநிலை கம்ப்யூட்டர் அப்பிளிகேஷன் படித்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பிற்கான கால அளவு குறைக்கப்பட்டதையடுத்து, பாடத்திட்டங்களும் மாற்றியமைக்கப்படவுள்ளன.