சென்னை: இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் டிசம்பர் 31ஆம் தேதி வரை மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவித்துள்ளது.
பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு
மாணவர்கள் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், பாடங்கள் நடத்துவதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CET) முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படவில்லை. இந்த காரணங்களால் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், பாடங்கள் நடத்துவதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வு ஜீலை மாதத்திற்குள் நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது என எதிர்பார்க்கப்படுகிறது.