சென்னை:44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 29) தொடங்கப்படவுள்ள நிலையில், உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் ஆர்காடி ஜோகோவிச், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். முதலாவதாக பேசிய சரவ்தேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச், “ஒலிம்பியாட் வரலாற்றில் அதிக நாடுகள் அதிக அணிகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக உள்ளது.
இந்த ஆண்டு சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உறுதி மொழியாக செஸ் FOR WOMEN என்ற உறுதிமொழிக்கு ஏற்ப அதிக நாடுகள் இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், “தமிழ்நாட்டில் தற்போது மிகவும் சிறந்த முறையில் இந்த போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தியா முழுவதிலும் ஒருங்கிணைந்தே இந்த போட்டியானது நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து பணிகளை இரவு பகல் பாராமல் செய்து முடித்து உள்ளோம்.
இந்த ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு இந்தியாவில் புதிய செஸ் சகாப்தம் தொடங்கப் போகிறது. மேலும் 8 மாத கர்ப்பிணியாக ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய வீராங்கனை ஹரிக்காவை நினைத்து பெருமை கொள்கிறோம் ,ஹரிகாவின் தைரியத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். அவர் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்” என்றார்.